/ மாவட்ட செய்திகள்
/ கரூர்
/ வீதி உலாவி்ல் பெரியவாளை மணமுருகி வணங்கிய பக்தர்கள் | Karur | Kanji Maha Periyava
வீதி உலாவி்ல் பெரியவாளை மணமுருகி வணங்கிய பக்தர்கள் | Karur | Kanji Maha Periyava
கரூர் மேட்டுத்தெருவில் ஸ்ரீ மகா பெரியவாள் உற்சவர் பிரதிஷ்டை நிகழ்ச்சி பெரியவா கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவர் மகா பெரியவாள் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிவன், நந்தி பிரத்தேக சப்பரத்தில் உற்சவர் காஞ்சி பெரியவாளை எழுந்தருள செய்தனர். மேள தாளங்கள் முழங்க கோயிலில் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா வந்தனர். வழியெங்கிலும் மகா பெரியவாளை பொதுமக்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாள் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஏப் 25, 2024