கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம் | Theft | Police attack| Krishnagiri
கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம் | Theft | Police attack| Krishnagiri கிருஷ்ணகிரி சையத் பாஷா மலைக்கு கடந்த 19 ம் தேதி இளம் பெண்ணும், ஆணும் சென்றனர். உறவினர்களான இவர்கள் திருமணமானவர்கள். நட்பாக பழகினர். சையத் பாஷா மலைக்கு வந்த போதை ஆசாமிகள் நால்வர் பெண்ணுடன் வந்த ஆணை அடித்து விரட்டினர். பெண்ணிடம் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். அதை மொபைலில் இரண்டு பேர் வீடியோ எடுத்தனர். பெண் அணிந்திருந்த செயின் மற்றும் கம்மலை பறித்தனர். அவரது மொபைல் போனை பறித்து அதிலிருந்து ஜி பே மூலம் 7 ஆயிரம் ரூபாயை தங்களது அக்கவுண்டிற்கு மாற்றிக் கொண்டனர். இங்கு நடந்ததை யாரிடமாவது சொன்னால் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என மிரட்டினர். மலையை விட்டு கீழே இறங்கிய பெண் கதறி அழுதார். அதை பார்த்து அக்கம் பக்கத்தினர் கூடினர். வேறு வழியின்றி நடந்ததை அப்பெண் சொன்னார். போலீசிடம் சென்றால் தங்களுக்கு பிரச்சினை வருமோ என்ற பயத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் திருப்பத்தூர் பஸ்ஸில் ஏறி அவரவர் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்தவர்கள் டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஸ்பாட்டிற்கு விரைந்த போலீசார் குறிப்பிட்ட நேரத்தில் மலையில் இருந்த மொபைல் ஃபோன் சிக்னலை டிராக் செய்தனர். பாதிக்கப்பட்ட இருவரையும் தேடி சென்று அவர்களது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர். குற்றவாளியின் ஜீ-பே நம்பர் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த கலையரசன் மற்றும் அபிஷேக்கை நேற்று இரவு கைது செய்தனர். சுரேஷ் மற்றும் நாராயணன் எஸ்கேப் ஆகினர். விசாரணையில் மது போதையில் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தோம். ஊரை விட்டு ஓட முயன்ற போது போலீசிடம் மாட்டிக்கொண்டோம். சுரேஷ் மற்றும் நாராயணன் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். நாங்கள் பணத்தை பறித்தோம் என கலையரசன் மற்றும் அபிஷேக் வாக்குமூலம் கொடுத்தனர். மேலும் பொன்மலை குட்டைப்பெருமாள் கோயில் பகுதியில் பதுங்கியிருந்த சுரேஷ் மற்றும் நாராயணனனை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது ஹெட் கான்ஸ்டபிள் விஜயகுமார் மற்றும் கான்ஸ்டபிள் குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றனர். தற்காப்புக்காக போலீசார் சுரேஷை வலது காலில் சுட்டு பிடித்தனர். தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததில் நாராயணனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயமடைந்த போலீசாரும் குற்றவாளிகளும் கிருஷ்ணகிரி அரசு ஹாஸ்பிடல் அட்மிட் செய்யப்பட்டனர். எஸ்.பி. தங்கதுரை சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, நகை, பணத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணை நடக்கிறது.