உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / காட்டுயானையை ஜேசிபி உதவியுடன் மீட்ட வனத்துறை

காட்டுயானையை ஜேசிபி உதவியுடன் மீட்ட வனத்துறை

காட்டுயானையை ஜேசிபி உதவியுடன் மீட்ட வனத்துறை / Krishnagiri / Wild elephant in distress after falling a pond கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அய்யூர் வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை தண்ணீர் குடிக்க மூர்க்கண்கரை கிராமத்திற்குள் புகுந்தது. அங்கு தோட்டத்தில் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் குட்டையில் தண்ணீர் குடிக்க இறங்கியபோது யானை தவறி குட்டைக்குள் விழுந்தது. அதிலிருந்து வெளியேற முடியாமல் யானை பிளிரியது. நீண்ட நேரம் போராடியும் யானையால் குட்டையில் இருந்து வெளியேற முடியவில்லை. ஸ்பாட்டிற்கு விரைந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் ஜேசிபி உதவியுடன் யானையை மீட்டு அய்யூர் வனத்தில் விரட்டினர்.

மார் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை