கிராம மக்கள் எதிர்ப்பால் படப்பிடிப்புக்குழு ஓட்டம் |Objection to film shooting|Aritapatti |Madurai
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி மலை பகுதியில் கிரேன் மற்றும் வெடி குண்டுகளுடன் சிலர் சினிமா சூட்டிங் எடுக்க வந்தனர். இதையறிந்த கிராம மக்கள் அரிட்டாபட்டி பல்லுயிர் தளமாக உள்ளது. இங்கு வெடி பொருட்கள் மற்றும் வெடி குண்டுகளை பயன்படுத்தினால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே இப்பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஸ்டெர்லைட் வேதாந்தா துணை நிறுவனம் முயற்சி எடுத்தது. அதை 48 கிராம மக்கள் ஒருங்கிணைந்து தடுத்து நிறுத்தினோம். எனவே இங்கு சூட்டிங் நடத்தக்கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் படக்குழுவிற்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஒத்தக்கடை போலீசார் மக்களின் எதிர்ப்பு காரணம் காட்டி சூட்டிங் நடத்த அனுமதி மறுத்தனர். அதைத் தொடர்ந்து படக்குழு பெட்டி படுக்கைகளுடன் ஓட்டம் பிடித்தது. இச்சம்பவம் அரிட்டாபட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.