உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / சிறு மழைக்கே ரோட்டில் தேங்கும் மழை நீர் | City Rain Water drainage system fail | Madurai

சிறு மழைக்கே ரோட்டில் தேங்கும் மழை நீர் | City Rain Water drainage system fail | Madurai

சிறு மழைக்கே ரோட்டில் தேங்கும் மழை நீர் / City Rain Water drainage system fail / people affect / Corporation / Madurai தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய முக்கிய நகரம் மதுரை. பழைமை வாய்ந்த வைகை நாகரீகம் உள்ள பெரு நகரம். மதுரை தென்தமிழ்நாட்டின் நுழைவு வாயிலாகவும் உள்ளது. மதுரை சிட்டியில் 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தொழிற்சாலை, சுற்றுலா, மருத்துவம் என முக்கிய பயன்பாட்டிற்காக மக்கள் மதுரையை நோக்கி வருகின்றனர். தமிழகத்தின் மழை நிறைவு மாவட்டம் மதுரை. இங்கு வெப்பம், மழை ரெண்டுமே அதிகம் தான். வெப்பத்தை மக்கள் சமாளிக்கிறார்கள். ஆனால் மழைநீர் வடிகால் முறையாக இல்லை. சிறு மழைக்கே மதுரை சிட்டி தாக்குப்பிடிக்க முடியாமல் ரோடுகள், தெருக்களில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தெப்பம் போல் தேங்கி நிற்கிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் இரண்டு நாட்கள் கொட்டிய மழையால் மதுரை மாநகரமே மிதந்தது. வெறும் 15 நிமிடத்தில் மட்டுமே 45 மில்லி மீட்டர் மழை கொட்டியது. இதில் செல்லூர் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு அய்யர் பங்களா, ஆத்திகுளம், நரிமேடு, கோசாகுளம் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட இடங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் தத்தளித்தனர். அதேபோல் கடந்த செப்டம்பர் 10ம் தேதி அதி கனழை கொட்டியது. இதனால் கழிவு நீருடன் மழை நீர் கலந்து மதுரை வழக்கம் போல் மிதந்தது. இச்சம்பவம் மதுரை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளவில்லை என வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியது. கார், ஆட்டோக்கள் மிதந்தன. இருச்சக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கியது. மக்கள் தொகைக்கு ஏற்ப முறையான மழை நீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை வசதி இல்லாததே இதற்கு முக்கிய காரணம். மக்களிடம் அடாவடியாணக வரியை வசூலிக்கும் மாநகராட்சி அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. சென்னைக்கு 2 ஆயிரம் கோடி மழை நீர் வடிகால் பணிக்கு ஒதுக்கும் அரசு மதுரைக்கு அதில் பாதியாவது ஒதுக்கினால் மதுரை வரும்காலத்தில் தப்பிக்கும் என்கிறார் மதுரை மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே மதுரையில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைத்தல், பழைய வடிகால்கள் புனரமைக்கும் பணிகளுக்காக 3,372 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 430 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் மட்டும் 22 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கவுள்ளது என்றனர். மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றன. எனினும் முழுமை பெறவில்லை. இதனால் வழக்கம் போல் சுமார் சிட்டியாகவே மதுரை உள்ளது. அரசு ஒதுக்கும் நிதியை முறையாகவும், மேம்பாட்டு பணிகளை தரமாகவும் மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

செப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை