தென்னந்தோப்பு வீட்டில் பதுக்கிய 720 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் | Confiscation of sea cards
தென்னந்தோப்பு வீட்டில் பதுக்கிய 720 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் | Confiscation of sea cards | brothers arrested | kilakarai ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெருவை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் முகம்மது அசாருதீன் வயது 27 மற்றும் முகமது நஸ்ருதீன் வயது 27. இருவரும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள். இவர்கள் சட்ட விரோதமாக கடல் அட்டைகளை சிலரிடம் வாங்கி பெரிய பாத்திரங்களில் அவித்து உலர வைத்து சேகரித்து தென்னந்தோப்பில் பதுக்கி வைத்தனர். அவற்றை இலங்கைக்கு கடத்தவும் திட்டமிட்டிருந்தனர். இத்தகவல் கிடைத்ததும் போலீஸ் எஸ் ஐ கோட்டைச்சாமி தலைமையில் போலீசார் ரமேஷ், முத்து செல்வம் ஆகியோர் சகோதரர்களின் தென்னந்தோப்பு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 15 சாக்குகளில் பதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 720 கிலோ எடை கொண்ட உலர்ந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். அவற்றை வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வானவர் கனகராஜ் ஆகியோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இவ்வழக்கில் சகோதரர்களை வனத்துறையினர் கைது செய்தனர். இருவரும் மீதும் ஏற்கனவே கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தியதாக வழக்குகள் உள்ளன.