மதுரை தமுக்கம் மைதானத்துக்கு படையெடுப்பு | Dinamalar Smart Shopper's EXPO 2024
மதுரை தமுக்கம் மைதானத்துக்கு படையெடுப்பு | Dinamalar Smart Shoppers EXPO 2024 | Tamukkam Ground | Madurai மதுரை தமுக்கம் மைதானத்தில் தினமலர் மற்றும் சத்யா இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024 கோலாகலமாக துவங்கியது. இந்த கண்காட்சியில் குட்டீஸ்கள் முதல் முதியவர் வரை அனைவரும் விரும்பும் பொருட்களை வாங்கி மகிழலாம். கண்காட்சியில் ஆச்சரியப்பட வைக்கும் பல அதிசயங்கள் காத்திருக்கிறது. கண்காட்சியில் தமிழக ஸ்டால்களுடன் வெளிநாடு, வெளி மாநிலங்களை சேர்ந்த ஸ்டால்கள் என 250 ஏசி ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. தமுக்கத்தில் உள்ளே நுழைந்தால் இது நம்ம மதுரையா... என ஆச்சரியத்தை ஏற்படுத்தி ஹைடெக் மெகா ஷாப்பிங் உலகத்திற்குள் நுழைந்த உணர்வு ஏற்படும். பெண்கள் விரும்பும் ரெடி மேட் ஆடைகள், அழகு சாதனம், பேன்ஸி பேக்ஸ், கலை நயமிக்க டிசைனர் ஜூவல்லரி, காலணிகள், பாரம்பரிய சேலை ரகங்கள் என விரும்பியதை மனம்போல் வாங்கலாம். அழகான வளைக்கரங்களுக்கு மேலும் அழகூட்டும் வகையில் அட்டகாசமான டிசைன்களில் மெகந்தியை இலவசமாக வரைந்து மகிழலாம்.