பாலாடையில் முருகக் கடவுளின் தத்ரூப ஓவியம்
பாலாடையில் முருகக் கடவுளின் தத்ரூப ஓவியம் / Drawing In delicate materials / Artist Karthi / Manamadurai / Sivagangai சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஓவியர் கார்த்தி. இவர் நுணுக்கமான பொருட்களில் ஓவியம் தீட்டி அசத்தி வருகிறார். இவர் பழங்கள், மயில் இறகுகள், இலைகள், பென்சில் உள்ளிட்ட பொருட்களில் உலகத் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், சுவாமி படங்கள், திரைப்பட நடிகர்களின் படங்களை வரைந்துள்ளாா். சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றபோது அங்குள்ள ஐயப்பன் சன்னிதானத்தையும், ஐயப்பனையும் தத்ரூபமாக வரைந்தார். இவரது ஐயப்பன் மற்றும் சன்னிதான ஓவியங்களை பார்த்து சபரிமலை மேல் சாந்தி ஓவியர் காத்தியை பாராட்டி கௌரவப்படுத்தினார். தற்போது பாலாடையில் முருக பெருமானின் படத்தை தத்ரூபமாக வரைந்து சாதனை படைத்துள்ளார். இந்த அபூர்வமான பாலாடை ஓவியம் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் மற்றும் முருக பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இவா் மானாமதுரை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஓவியம் வரைய கற்றுக்கொடுத்து வருகிறாா்.