உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலம் | kallalagar vaigai river festival | chithirai festival

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலம் | kallalagar vaigai river festival | chithirai festival

மதுரை அழகர் கோயில் சித்திரை திருவிழா 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக 21ம் தேதி அழகர் கோயிலில் இருந்து தங்கக் குதிரையில் கள்ளழகர் புறப்பட்டார். வழிநெடுகிலும் உள்ள மண்டகபடியில் எழுந்தருளினார். நேற்று இரவு மூன்று மாவடி, தல்லாகுளம் பகுதியில் எதிர்சேவை நடந்தது. இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனம் நடந்தது. இன்று அதிகாலையில் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை கள்ளழகர் ஏற்றுக்கொண்டார். பின்னர் வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரையில் அமர்ந்து அழகரை வரவேற்க, தங்க குதிரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழா கோலாகலமாக நடந்தது. சிகர விழாவை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அழகர் ஆற்றில் இறங்கும் போது கோவிந்தா... கோவிந்தா... என்று விண் அதிர பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

ஏப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை