மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி நித்ய தீபாநந்தா மகராஜ் பங்கேற்பு
மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி நித்ய தீபாநந்தா மகராஜ் பங்கேற்பு | Kanchi Maha Periyavar temple boomi puja | madruai மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாட்டில் மதுரை அழகர்கோவில் அருகே பொய்கைக் கரைப்பட்டி சிட்டி பால்ஸ் வளாகத்தில் ஸ்ரீகாஞ்சி ஸ்ரீமகா பெரியவர் கோயில் கட்டுமான பணி பூமி பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு ஹோமங்கள், ஆராதனைகள், மஹன்யாசம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன. நெல்லை பாலு வரவேற்றார். சட்டசபை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமார், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் ராமகிருஷ்ணன், ஆடிட்டர் சேது மாதவா, நந்தினி ரியல் எஸ்டேட் உரிமையாளர் பிரபு, ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குனர் ஜெயக்குமார், மகா பெரியவர் குரூப் சேர்மன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி ஸ்ரீ நித்ய தீபாநந்தா மகராஜ் குத்து விளக்கேற்றி திருப்பணியைத் தொடங்கி வைத்தார். விழாவில் தமிழ்நாடு முழுதும் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் ஸ்படிக மாலை, விபூதி பிரசாதம், ஸ்ரீமகா பெரியவர் புகைப்படம், அழகர்கோவில் தோசை பிரசாதம் மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.