உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / 320 காவடிகள், சர்க்கரைக் காவடிகள் என ஆயிரக்கணக்கான நகரத்தார் பழநி பாத யாத்திரை

320 காவடிகள், சர்க்கரைக் காவடிகள் என ஆயிரக்கணக்கான நகரத்தார் பழநி பாத யாத்திரை

320 காவடிகள், சர்க்கரைக் காவடிகள் என ஆயிரக்கணக்கான நகரத்தார் பழநி பாத யாத்திரை | Natham | Kavadi with Vairavel | 420 years old traditional pilgrimage on foot சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை உள்ளிட்ட நகரத்தார்கள் கடந்த 420 ஆண்டுகளாக தை பூசத்திற்கு பாரம்பரியமிக்க வைரவேல், சர்க்கரைக் காவடிகளுடன் பாதயாத்திரையாக பழநிக்கு காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தி வருகின்றனர். சுவாமி தரிசனத்திற்கு பின் மீண்டும் நடந்தே வீடு திரும்புவது இவர்களது தனிச்சிறப்பு. கால மாற்றத்திற்கேற்ப தங்களது பழக்கங்களை மாற்றாது தங்களது முன்னோர்கள் சென்ற பாதையில் இன்றும் மாறாது தங்களது பாத யாத்திரையை தொடர்கின்றனர். பிப்ரவரி 1 ஆம் தேதி தை பூசத்தன்று பழநி சென்றடைந்து அதன் பின் பிப்ரவரி 3 அன்று மலைக்கோயிலில் காவடி செலுத்துவர். பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள், 320 சர்க்கரைக் காவடிகள் என ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கடந்த 23 ம் தேதி குன்றக்குடியில் இருந்து புறப்பட்டனர். இன்று காலை நத்தம் பஜனை மடத்தில் பானக பூஜை நடைபெற்றது. பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு காவடிகள் காவடி ஆட்டத்துடன் பக்தர்கள் பழநியை நோக்கி புறப்பட்டனர். பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்களால் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. செல்லும் இடமெல்லாம் அன்னதானத்துடன் பக்தியை வளர்ப்பது நகரத்தார்களின் தனிச்சிறப்பு.

ஜன 29, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.jayaram
ஜன 29, 2026 13:38

இவர்களுக்கு முன்னரே செங்குந்தர் சமூகத்தார் தேவகோட்டையில் இருந்து பழனி பாதயாத்திரை சென்று வருகின்றனர், அவர்களுடன் இணைந்து பின்னர் நகரத்தாரும் செல்ல ஆரம்பித்தார் கள் அது பற்றிய ஆவணங்கள் தேவகோட்டை இல் உள்ளன


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை