உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / இரவு நேர சேவைக்கு யாரும் முன் வரவில்லை | Madurai Airport 24 hours Operational problem

இரவு நேர சேவைக்கு யாரும் முன் வரவில்லை | Madurai Airport 24 hours Operational problem

மதுரை டு சென்னை, பெங்களூரு, டில்லி, மும்பை, இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த பலதரப்பினரும் வலியுறுத்தினர். இதையடுத்து சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெரிய விமானங்கள் வந்திறங்கும் வகையில் ரன்வேயின் நீளம் 2 கி.மீ., தொலைவுக்கு நீட்டிக்கப்பட உள்ளது. கூடுதல் டெர்மினல்கள், 24 மணி நேரமும் செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே 24 மணி நேர சேவை இன்று முதல் அமலாகிறது. பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கூடுதலாக 54 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். விமான நிலைய ஊழியர்கள் கூடுதலாக தேவை என்பதால் திருவனந்தபுரம், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஊழியர்கள் பலர் இங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரம் சேவையை இந்திய விமான நிலைய ஆணைய சேர்மன் சுரேஷ் இன்று மாலை துவக்கி வைக்கிறார். எனினும் இச்சேவையில் இணைய இதுவரை எந்த ஒரு விமான நிறுவனமும் முன் வரவில்லை. இதன் காரணமாக வழக்கம் போல் காலை 7.10 மணி முதல் இரவு 8.35 மணி வரையிலான சேவை மட்டுமே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கூறுகையில், தற்போது வரை 24 மணி நேர சேவையில் இணைய எந்த ஒரு நிறுவனமும் முன்வரவில்லை. குளிர் கால அட்டவணை வரும் 17ம் தேதி துவங்குகிறது. அப்போது புதிய விமான நிறுவனங்கள் மற்றும் புதிய சேவைகள் தொடங்கப்படும். மதுரை விமான நிலைய இரவு நேர சேவைக்கு 50 சி ஐ எஸ் எப் வீரர்கள் வந்துள்ளனர். 24 மணி நேர சேவையில் விமான நிறுவனங்கள் இணைந்த பின் கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்படுவர். மதுரை விமான நிலையத்தில் இரவு நேரங்களில் தனியார் விமானங்கள் மற்றும் தனிநபரின் விமானங்கள் இறங்குவதற்கு தயாராக உள்ளது, என்றார். இதன்படி வரும் 15ம் தேதிக்கு பின் புதிய விமானங்கள் வருகையை தொடர்ந்து விமான நிலையத்தின் மற்ற செயல்பாடுகள் முழு நேரமும் செயல்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை