உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / 18 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கும்பாபிஷேகம் | Nagammal temple kumbabhishekam | Melur | Madurai

18 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கும்பாபிஷேகம் | Nagammal temple kumbabhishekam | Melur | Madurai

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி அலுவலகம் அருகே பழமையான நாகம்மாள் கோயில் உள்ளது. இங்கு திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக யாக வேள்விகள் கடந்த 10 ம் தேதி துவங்கியது. யாக பூஜை நிறைவு பெற்று கோபுர கும்ப கலசத்திற்கு சிவன்கோயில் தலைமை குருக்கள் சிவ ஶ்ரீ தட்சணாமூர்த்தி தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிேஷக விழாவில் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை