உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தினமலா் மற்றும் ஸ்டாரெட்ஸ் சார்பில் நீட் மாதிாி தோ்வு - 2025

தினமலா் மற்றும் ஸ்டாரெட்ஸ் சார்பில் நீட் மாதிாி தோ்வு - 2025

டாக்டர் கனவை நினைவாக்கும் ‛தினமலர் நீட் மாதிரி தேர்வு டிஸ்க்: தினமலா் மற்றும் ஸ்டாரெட்ஸ் சார்பில் நீட் மாதிாி தோ்வு - 2025 / NEET Model Exam 2025 conducted by Dinamalar and Starest / Mannar Thirumalai Naicker College / Madurai ஆண்டு தோறும் டாக்டர் கனவில் உள்ள மாணவர்கள் நலன் கருதி தினமலர் சார்பில் இலவச நீட் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்டாரெட்ஸ் நிறுவனம் சாா்பில் மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் இன்று நடைபெற்றது. இதில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த 1200 மாணவ, மாணவியா்கள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை தோ்வெழுதினா். நாளைய டாக்டர் கனவு நனவாகும் வகையில் மாணவர்களுக்கு இத்தேர்வு மூலம் தினமலர் வழிகாட்டி வருகிறது. வரும் மே 4ல் நடக்கும் நீட் மெயின் தேர்வை எதிர் நோக்கியுள்ள மாணவர்கள், தங்களை சுயமாக பரிசோதித்துக்கொள்ள இத்தேர்வு நல்ல வாய்ப்பாக இருந்ததாக தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். இந்த மாதிாி தோ்வின் முடிவுகள் ஏப்ரல் 29ம் தேதி ஸ்டாரெட்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்படும். அதே நாளில் டாப் 20 மாணவா்களின் முடிவுகள் தினமலா் நாளிதழில் வெளியாகும்.

ஏப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி