அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசு இழுத்தடிப்பு | Opposition to setting up a tungsten mine | Melur
அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசு இழுத்தடிப்பு | Opposition to setting up a tungsten mine | Melur | Madurai மதுரை மாவட்டம் மேலுார் அருகே அரிட்டாபட்டி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க துாத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலுாரில் 48 கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் மத்திய அரசு அனுமதியை ரத்து செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. இதைக் கண்டித்து கிராம மக்கள் காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும், சுரங்கத்திற்க்கான உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய அரசு டங்ஸ்டன் சுரக்கத்திற்க்கான உத்தரவை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.