உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / 1300 பேருக்கு தலா 40 நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்க ஏற்பாடு | Subsidy for raising poultry | Madurai

1300 பேருக்கு தலா 40 நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்க ஏற்பாடு | Subsidy for raising poultry | Madurai

மதுரை கலெக்டர் சங்கீதா கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில் ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தலா 40 எண்ணிக்கையில் நாட்டு கோழிக்குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்ப்படும். இத்திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய அளவில் தலா 100 பயனாளிகள் வீதம் மொத்தம் 1300 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஏழைப்பெண்ணாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வசிக்கும் கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். பயனாளி 3200 ரூபாய் செலுத்தி நாட்டு கோழிகுஞ்சுகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

அக் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி