ஆதி கும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
உலகில் முதன் முதலில் தோன்றிய ஸ்தலம் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் என்பது ஐதீகம். அதுமட்டுமில்லாமல் ஆதி கும்பேஸ்வரர் கோயில் உலகப் புகழ்பெற்ற மகா மகம் உற்சவம் நடைபெறும் முக்கிய ஸ்தலம். பழமையான கோயிலில் 2022ம் ஆண்டு முதல் புனரமைப்பு பணிகள் துவங்கியது. சுமார் 18 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து. நவம்பர் 27ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் கும்பாபிஷேக யாகசாலை தொடங்கியது. எட்டு கால யாகசாலை பூஜைகள் மகாபூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடானது. வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் ஆதி கும்பேஸ்வரர் சன்னதியில் மகா அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சிவ சிவ கோஷம் முழங்க திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.