/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ திரளான பக்தர்கள் சாமி தரிசனம் Thirukalyana Utsavam at Thanthondreeswarar Temple
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் Thirukalyana Utsavam at Thanthondreeswarar Temple
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த ஆக்கூர் கிராமத்தில் வாள் நெடுங்கண்ணி உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. கோச்செங்கட் சோழ மன்னனால் கட்டப்பட்ட இக்கோவிலில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றிஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இது தேவாரப்பாடல் பெற்றதும் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் பிறந்து வளர்ந்து சிவனை வழிபட்டு முக்தி அடைந்த தலம் ஆகும். இக்கோயிலில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
ஏப் 24, 2024