உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நாகப்பட்டினம் / ஏழை மீனவ குடும்பத்திற்கு நாம் தமிழர் கட்சி உதவி | fisherman family living in darkness for 4 years

ஏழை மீனவ குடும்பத்திற்கு நாம் தமிழர் கட்சி உதவி | fisherman family living in darkness for 4 years

நாகை மாவட்டம் சாமந்தன் பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் உஷா - செல்வம் தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். கடற்கரை ஓரம் இடம் வாங்கி குடிசை வீடு கட்டினர். மின்சார இணைப்பு இல்லை. பிள்ளைகளை தெருவிளக்கில் படிக்க வைத்தனர். தேர்தலுக்கு ஓட்டு கேட்க சென்ற நாம் தமிழர் கட்சியினர் மீனவ குடும்பத்தின் துன்பத்தை அறிந்தனர். தேர்தல் முடிந்ததும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்தனர். வீட்டிற்கு மின் இணைப்பு கிடைத்தது. குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர். ஏழை மீனவ குடும்பத்திற்கு உதவிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை