உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / யானைகளை விரட்ட மிளகாய்தூள் வைத்தியம் | Chili powder to repel elephant | Pandalur

யானைகளை விரட்ட மிளகாய்தூள் வைத்தியம் | Chili powder to repel elephant | Pandalur

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட 6 வனச்சரகங்களில் 150 காட்டு யானைகள் தொடர்ச்சியாக இருப்பது கண்டறியப்பட்டு அவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த யானைகளின் தினசரி செயல்பாடுகள் குறித்து வனத்துறையினர் பதிவு செய்து வருகின்றனர். இதன் மூலம் யானைகளால் பாதிப்பு ஏற்படும் போது, யானைகளை அடையாளம் காட்ட இது ஏதுவாக அமைகிறது. இந்நிலையில் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் புல்லட் என அழைக்கப்படும் ஆண் காட்டு யானை ஒன்று தொடர்ச்சியாக குடியிருப்புகளை இடித்து வருகிறது. மக்கள் இதனை பிடித்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த யானையை தினமும் கண்காணித்து வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் பாதுகாக்கும் பணியில் மட்டுமே வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இதன் நடமாட்டத்தை கண்காணிக்க டெர்மினல் கேமரா பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து எழும் புலி மற்றும் தேனீக்களின் சத்தத்தை கேட்டு யானை இடம் பெயர்ந்தது. நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி டான்டீ கோட்ட மேலாளர் பங்களாவிற்கு சென்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று யானையை துரத்தினர். எனினும் யானை ஏலியஸ் கடை சாலையை ஒட்டிய புதரில் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் யானை ஊருக்குள் வராமல் தடுக்க மஸ்து ஏற்பட்ட யானைகளின் சாணம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மிளகாய் தூள் மற்றும் வேப்பெண்ணெய் கலந்த துணிகளை வீட்டு வாசல்களில் தொங்கவிடும் பணியில் வனத்துறையின ஈடுபட்டனர். இதன் நாற்றத்தை நுகரும் யானைகள் அங்கிருந்து வெளியேறும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தொல்லை தரும் புல்லட் யானையை பிடித்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி வரும் 26ம் தேதி சேரம்பாடி வனச்சரகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

டிச 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ