உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஐகோர்ட் உத்தரவுக்கு உள்ளூர் மக்கள், டூரிஸ்ட்டுகள் வரவேற்பு | E Pass tourists welcome | ooty

ஐகோர்ட் உத்தரவுக்கு உள்ளூர் மக்கள், டூரிஸ்ட்டுகள் வரவேற்பு | E Pass tourists welcome | ooty

கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். கட்டுக்கடங்காத சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலை பகுதிகளுக்கு செல்ல மே 7 தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் மற்றும் டூரிஸ்ட்டுகள் மத்தியில் அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இ - பாஸ் முறையால் விடுதிகளில் பல மடங்கு கட்டணம் சீசனுக்காக உயர்த்துவது தவிர்க்கப்படும், போக்குவரத்து நெரிசல் தவிர்க்கலாம். சுற்றுச்சூழல் மாசடைவது பெருமளவு குறையும். கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட கோடைவாசஸ் தலங்களில் இ - பாஸ் முறையை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

ஏப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை