உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / 6 மனுக்கள் மீது FiR பதிவு, 63 மனுக்களுக்கு சுமூக தீர்வு

6 மனுக்கள் மீது FiR பதிவு, 63 மனுக்களுக்கு சுமூக தீர்வு

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரர்கள் எதிர்மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டனர். நிலுவையில் இருந்த குடும்பப் பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்னை தொடர்பான 78 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டனர். அதில் 6 மனுக்கள் மீது FiR பதிவு செய்யப்பட்டது. 63 மனுக்கள் சுமூகமான முறையிலும் 15 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரைத்து தீர்வு காணப்பட்டது. மக்கள் குறைதீர் முகாமில் கூடுதல் எஸ்.பிக்கள் டி.எஸ்.பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்

ஜன 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி