உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / உயர்மட்ட பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல் | Flooding in Bhawani River | Severance of Villa

உயர்மட்ட பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல் | Flooding in Bhawani River | Severance of Villa

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை, லிங்கபுரம் மற்றும் காந்தவயல் கிராமங்கள் பவானிசாகர் அணையின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது தென்மேற்கு பருவ மழை காரணமாக பில்லூர் அனை நிரம்பி உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டதால் பவானிசாகர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் லிங்காபுரம், காந்தவயல் பகுதிகளில் தண்ணீர் தேங்கி சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது. கிராம போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின. ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள பாலம் தண்ணீரில் மூழ்குவதால் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது. பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல்லாம் கிராமங்கள் துண்டிக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இப்பிரச்னைக்கு ஒரே தீர்வாக உயர் மட்டப் பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை