உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பந்தலுாரில் செப்டிக் டேங்க் லாரி சிறைப்பிடிப்பு|Human waste dumped in streams |Pandalur|Nilgiris

பந்தலுாரில் செப்டிக் டேங்க் லாரி சிறைப்பிடிப்பு|Human waste dumped in streams |Pandalur|Nilgiris

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குடியிருப்புகள், ஓய்வு விடுதிகளில் இருந்து மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில், தமயந்தி மற்றும் ஜானகி ஆகிய பெயர்களில் செப்டிக் டேங்க் கிளீனிங் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் எந்தவித அனுமதியும் இல்லாமல், மனிதக் கழிவுகளை இதற்கான டேங்கர் லாரிகள் மூலம் உறிஞ்சி எடுத்து, வனப்பகுதிகள் மற்றும் நீரோடைகளில் கொட்டும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். பலமுறை இவர்களை எச்சரித்து அனுப்பியும், கடந்த 2024 ஆம் ஆண்டு மக்கள் குடியிருப்புக்கு அருகே வனப்பகுதி வழியாக செல்லும் சப்பந்தோடு ஆற்றில் கழிவுகளை கொட்டியதால் ஊராட்சி நிர்வாகம் 57 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இனி இந்த பகுதியில் அனுமதி இன்றி கழிவுகளை எடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. எனினும் தொடர்ச்சியாக இவர்கள் கழிவுகளை ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிகளில் கொட்டிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சம்பவத்தன்று சேரம்பாடி அருகே டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்புக்கு எதிரே மக்கள் மற்றும் இதன் அருகே வனவிலங்குகள் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ளூர் நபர் ஒருவரின் ஆதரவுடன், மனிதக் கழிவுகளை கொட்டி உள்ளனர். அதனைப் பார்த்த பகுதி மக்கள் இரண்டு டேங்கர் லாரிகளையும் பிடித்து, சேரம்பாடி போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசீலன், எஸ்ஐ வெற்றிச்செல்வன், சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷைனி, ஊராட்சி செயலாளர் ஷோனிஜார்ஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

ஜன 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை