உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கன்டோன்மென்ட் மற்றும் ராணுவ அதிகாரிகள் மெத்தனத்தால் நேர்ந்த துயரம் | coonoor

கன்டோன்மென்ட் மற்றும் ராணுவ அதிகாரிகள் மெத்தனத்தால் நேர்ந்த துயரம் | coonoor

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கூர்கா கேம்ப் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன், வயது 43. சுற்றுலா வாகன டிரைவர். இவர் தனது ஷிப்ட் காரை ஒர்க்ஷப்பில் இருந்து நேற்று மாலை எடுத்து வந்தார். பேரக்ஸ் ராணுவ மையம் ரோட்டில் சென்றபோது ராட்சத கற்பூர மரம் கார் மீது விழுந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி ஸ்பாட்டிலேயே ஜாகிர் உசேன் பலியானார். உடனடியாக ராணுவ வீரர்கள், குன்னூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மரத்தை வெட்டி அகற்றினர். டிரைவர் உடலை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வெலிங்டன் போலீசார் அனுப்பினர். மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. விபத்துக்கு காரணம் யார் என்பது குறித்து கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார் கூறுகையில், வெலிங்டன் ராணுவ மையம் முன்பு உள்ள பாதுகாப்பு துறைக்கு சொந்தமான விபத்து ஆபத்து ஏற்படுத்தும் சில மரங்களை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி