தரையில் குத்தியதால் தந்தம் உடைந்தது | Nilgiris | Wild Elephant
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் ஆபயாரணயம் யானைகள் முகாமில் 58 வயதான வளர்ப்பு யானை முதுமலைக்கு கடந்த ஆண்டு ஓய்வு பெற வந்தது. யானையை பாகன் பொம்மன் இரவு தெப்பக்காடு பகுதியில் கட்டி வைத்தார். அதிகாலை 2:30 அங்கு, வந்த காட்டு யானையை பார்த்து கோபமடைந்த வளர்ப்பு யானை சில அடிகள் நகர்ந்து கோபத்தில் தந்தங்களை தரையில் குத்தியது. இதில் வலது தந்தம் உடைந்தது. யானையின் சத்தம் கேட்டு வந்த பாகன், அதனை சமதானப்படுத்தி, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதுமலை துணை இயக்குனர் வித்யா, யானையை பார்வையிட்டு விபரங்களை கேட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்திரவிட்டார்.
ஜன 24, 2024