வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை| Republic day security
குடியரசு தின விழாவையொட்டி நீலகிரி போலீஸ் எஸ்பி சுந்தர வடிவேல் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டூரிஸ்ட்டுகள் அதிகம் வரும் குன்னூர் ரயில்வே ஸ்டேஷன், சிம்ஸ்பூங்கா மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை ஜனவரி 26 வரை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.
ஜன 18, 2024