உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / சூரல்மலை, முண்டக்கை பகுதியில் மண்ணை தோண்டி உடல்களை தேடும் மீட்புக்குழு

சூரல்மலை, முண்டக்கை பகுதியில் மண்ணை தோண்டி உடல்களை தேடும் மீட்புக்குழு

சூரல்மலை, முண்டக்கை பகுதியில் மண்ணை தோண்டி உடல்களை தேடும் மீட்புக்குழு | Rescue team searching for bodies Mundakkai, Suralmalai வயநாடு சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதியில் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது. தொடர்ந்து பெரிய அளவிலான பொக்லைன்கள் மற்றும் மீட்பு குழுவினர் இணைந்து மண்ணை தோண்டி உடல்களை தேடி வருகின்றனர். மண் சரிவால் உருக்குலைந்து போன சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதியில் ராணுவ மீட்புக்குழு தொடர்ந்து நான்காவது நாளாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண் சரிவால் குடியிருப்புக்கள் மண்ணில் புதைந்தன. நுாற்றுக் கணக்கானோர் பெரு வெள்ளத்தில் உயிருடன் அடித்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்தனர். தன்னார்வலர்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆற்றின் கரையோர தேயிலை தோட்டங்களிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ