ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் நுாற்றாண்டு கடந்த பாரம்பரிய கலாச்சார வழிபாடு
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் நுாற்றாண்டு கடந்த பாரம்பரிய கலாச்சார வழிபாடு / Temple Angapradakshan / involving only men / coonoor நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் அருகே பேரட்டி கிராமத்தில் பழமையான பால முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டம் சூழ்ந்த இடத்தில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து படுக இன மக்கள் பாரம்பரிய வெள்ளாடை அணிந்து வழிபாடு நடத்தினர். முதல் மொட்டையிடும் நேர்த்திக்கடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் காவடி எடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். முக்கிய நிகழ்வாக விநாயகர் கோயிலில் இருந்து முருகன் கோயில் வரை அரை கி.மீ. தூரம் மேடு மற்றும் இறக்கத்தில் ஆண்கள் மட்டும் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தியது பக்தர்களை பரவசப்படுத்தியது. நுாற்றாண்டை கடந்து நடக்கும் பாரம்பரிய அங்கப்பிரதட்சணம் வைபவத்தில் வெள்ளாடையுடன் தரையில் விரித்து அதில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். வண்ண குடைகளுடன் படுக நடனமாடினர். அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் ஊர்வலம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.