சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து காத்திருக்கும் வனத்துறை | leopard | Attack
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை சமீபத்தில் மூன்று பெண்களை தாக்கியதில் சரிதா என்ற பழங்குடியின பெண் பரிதாபமாக இறந்தார். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 4 இடங்களில் கூண்டு வைத்து, 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி 24 மணி நேர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் போக்குக்காட்டி வருகிறது. இந்நிலையில் பந்தலூர் பாதிரிமூலா பகுதியைச் சேர்ந்த மோகிலா ஆஸ்பிடலுக்கு சென்றார். வீட்டிற்கு அருகே ரோட்டோரம் படுத்திருந்த சிறுத்தை அவரை துரத்தியது. உயிர்தப்பிக்க ஓடியதில் தவறி விழுந்து காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட மக்கள் சத்தம் போட்டு சிறுத்தையை விரட்டினர். போக்கு காட்டும் சிறுத்தையை தேடும் பணியில் வனக்குழுவினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கிராம மக்கள் பாதுகாப்புடன் வெளியே செல்ல அறிவுறுத்தினர்.