உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / 4 வயது ஆண் புலிக்கு நேர்ந்த பரிதாபம் | Tiger Death | 3 arrested | Guddalore

4 வயது ஆண் புலிக்கு நேர்ந்த பரிதாபம் | Tiger Death | 3 arrested | Guddalore

நீலகிரி மாவட்டம் கூடலூர் செலுக்காடி அருகே வனப்பகுதியில் நேற்று 4 வயது ஆண் புலி சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்து கிடந்தது. புலி உடலை முதுமலை கள இயக்குனர் கிருபாசங்கர், கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். கால்நடை மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். கூடலூர் உதவி மனப் பாதுகாவலர் கருப்பையா தலைமையில் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் சுருக்கு கம்பி வைத்தது ஆனசெத்தகொல்லியைச் சேர்ந்த மணிகண்டன், மாரிமுத்து, தட்டக்கொல்லியை சேர்ந்த விக்னேஷ் என தெரியவந்தது. மூவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். வனத்துறையினர் கூறுகையில், அப்பகுதியில் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக சுருக்கு கம்பி வைத்துள்ளனர். அதில் சிக்கி புலி உயிரிழந்துள்ளது. இவர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்ட போது, வன விலங்குகளுக்கு சுருக்கு வைக்க பயன்படும் சுருக்கு கம்பிகள் மற்றும் வீட்டின் அருகே வைக்கப்பட்ட சுருக்கு கம்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது போலீசில் பல வழக்குகள் உள்ளது. சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளனர் என்றனர்.

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி