உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / 300 மாணவர்கள் அசத்தல் சாதனை | World record silambattam| sports | coonoor

300 மாணவர்கள் அசத்தல் சாதனை | World record silambattam| sports | coonoor

300 மாணவர்கள் அசத்தல் சாதனை | World record silambattam| sports | coonoor நீலகிரி மாவட்டம் குன்னூர் பிருந்தாவன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் கலாம் உலக சாதனைக்காக சிலம்பம் போட்டி நடந்தது. கோவை வெற்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் போட்டி நடத்தப்பட்டது. இதில், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் 300-பேர் பங்கேற்றனர். போட்டியை பள்ளி முதல்வர் டாக்டர் கிளாடிஸ் டயானா சிவகுமார் துவக்கி வைத்தார். குன்னூர் கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் கணேஷ் மற்றும் சென்னை கலாம் உலக சாதனை குழுவினர் பங்கேற்றனர். மரங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில், 79வது சுதந்திர தின விழாவிற்காக 79 நிமிடங்களில், சிறு குழந்தைகள் முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் தொடர்ந்து சிலம்பாட்டத்தில் ஈடுபட்டு சாதனை முயற்சியில் ஈடுபட்டனர் தொடர்ந்து சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஷீல்டு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பு குழுவினர் செய்தனர்.

நவ 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை