உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் | Bharatha war Thimithi at Draupadi Amman Temple

பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் | Bharatha war Thimithi at Draupadi Amman Temple

புதுச்சேரி அடுத்த உள்ள கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவத்தை முன்னிட்டு பஞ்சபாண்டவர்களின் 18 நாள் போரை குறிக்கும் திருவிழா 8-ம் தேதி துவங்கியது. சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கொக்கு மலையில் ஊர் மக்கள் பொங்கலிட்டு அம்மன் அர்ஜுனனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது . தொடர்ந்து நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவும், தெருக்கூத்தும் நடைபெற்றது முக்கிய விழாவான அம்மன் அர்ஜுனன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், அம்மன் அர்ஜுனன் வீதி உலாவும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக பாரதபோரை குறிக்கும் பஞ்சபாண்டவர்களின் படுகள நிகழ்ச்சியும் , தீ மிதிக்கும் தீமிதி நிகழ்ச்சியும் நடந்தது. சுற்றுப்புற கிராம மக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஏப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை