துவக்க நாளிலேயே வெள்ளி காயின் அள்ளிய வாடிக்கையாளர்கள் | Dinamalar Smart Shoppers Expo - 2025 Opening
துவக்க நாளிலேயே வெள்ளி காயின் அள்ளிய வாடிக்கையாளர்கள் / Dinamalar Smart Shoppers Expo - 2025 Opening Ceremony / Puducherry புதுச்சேரி உப்பளம் துறைமுகம் மைதானத்தில் தினமலர் மற்றும் டார்லிங் இணைந்து நடத்தும் மாபெரும் வீட்டு உபயோக பொருட்காட்சி இன்று கோலாகலமாக துவங்கியது. இக்கண்காட்சியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார். புதுச்சேரி பதிப்பு தினமலர் வெளியீட்டாளர் கே வெங்கட்ராமன், தினமலர் இணை இயக்குனர் ஆ.லட்சுமிபதி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஜான் குமார், எம் எல் ஏ ரமேஷ், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்காட்சியில் மங்கையர் மனங்கவரும் அழகு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அனைத்து தரப்பினரையும் வசீகரிக்கும் விதவிதமான உணவு வகைகள் என, அசத்தலான குளுகுளு அரங்குகள் வாடிக்கையாளர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறது. புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், வடலுார், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிகளில் ஷாப்பிங் செல்ல எவ்வளவு கடைகள், ஸ்டோர் இருந்தாலும், அனைத்து விதமான பொருட்களையும் ஒரே இடத்தில், குடும்பத்துடன் குதுாகலமாக ஷாப்பிங் செய்து விரும்பியதை வாங்கும் அரிய வாய்ப்பை ஆண்டு தோறும் தினமலர் ஏற்படுத்தி வருகிறது. அதிரடி சலுகை விலையில், இல்லத்துக்கு தேவையான பர்னீச்சர்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், பரிசுப் பொருட்கள், அலங்கார பொருட்கள், அழகு சாதனங்கள் என, நீங்கள் வாங்கும் பொருட்களின் அரங்குகள் வரிசை கட்டி நிற்கின்றன. தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள வர்த்தக நிறுவனங்களின் ஸ்டால்கள் அனைத்தும் ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளன. அதில், மொபைல் போன் விற்பனையில் தனி முத்திரை பதித்து வரும் டார்லிங் நிறுவனம், சாம்சங், விவோ, ஓபோ, ரியல்மி, எம்ஐ சியோமி மற்றும் ஆப்பிள் ஆகிய முன்னணி மொபைல் பிராண்ட்களின் புதிய மாடல்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவித்துள்ளன. எந்த மொபைலும் வெறும் ஒரு ரூபாய் செலுத்தி வாங்கலாம் . சாம்சங், ஆப்பிள், விவோ, ஓபோ, ரியல்மி ஆகிய பிரபல மாடல்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். சில மொபைல்களுக்கு 36 மாதம் வரை நீண்ட இ.எம்.ஐ., வசதி உள்ளது. பெரிய தொகையை ஒரே சமயத்தில் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், மாதத்தோறும் கட்ட முடியும். தினமலர் கண்காட்சியில் இந்த முறை புதுமைக்கு பஞ்சம் இல்லை ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கும் காட்சிக்கும் இடம் பெற்றுள்ளது. துவக்க விழாவையொட்டி கண்காட்சியை காண முதலில் வந்த 100 குடும்பங்களுக்கு பாண்டி ராம் தங்க மாளிகை சார்பில் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது. விலை உயர்ந்த பிரீமியம் மொபைல் வாங்கினால், ஒயர்லஸ் ஏர்பட்ஸ், பாக்ஸ் பேக், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பல பரிசுகள் கிடைக்கும். குறைந்த விலையில் மொபைல்போன் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு தினமலர் கண்காட்சி தான் சிறந்த சாய்ஸ். மணி பார்ஸ்சை மிச்சப்படுத்தும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ நுழைவு கட்டணம் நபருக்கு 50 ரூபாய். 5 வயதுக்கு உட்பட்ட குட்டீஸ்களுக்கு இலவசம். இன்று துவங்கிய கண்காட்சி வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இன்னும் 3 நாட்களே கண்காட்சி நடைபெறும் என்பதால் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவை காண படையெடுத்த வண்ணம் உள்ளனர். பேன்சி பொருட்கள் துணி வகைகள் என பலவகையான பொருட்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் படி பல நவீன டிசைன்களில் குவிந்து கிடக்கிறது. மலைக்க வைக்கும் விதத்தில் மகளிர் ஸ்பெஷல் ரகங்கள் புத்தும் புதிய டிசைன்களில் ஏராளமாக கிடைக்கும். குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு புதுமையான விளையாட்டு சவால் காத்திருக்கின்றன ஒட்டகச் சவாரி, குட்டீஸ் ரயில், வாட்டர் ரோலர், என எக்கச்சக்க விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளின் ஸ்டால்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இல்லத்தரசிகள் உட்பட அனைவரின் மனதை கவர்ந்து வரும் பொன்னான தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவை மிஸ் பண்ணிடாதீங்க. அப்பறம் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருக்கும். ம்ம்ம் இப்பவே கிளம்புங்க.