தண்ணீர் கலந்த பெட்ரோல் போட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
தண்ணீர் கலந்த பெட்ரோல் போட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி | supply of water mixed petrol to vehicle| People protest . தஞ்சை- கும்பகோணம் நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கில் வாகன ஓட்டிகள் இன்று காலை பெட்ரோல் போட்டுள்ளனர். சிறிது தூரம் சென்ற வாகனங்கள் பழுதாகி நின்றன. வண்டியில் இருந்த பெட்ரோலை சோதனை செய்தபோது தண்ணீர் கலந்து இருந்தது. பெட்ரோல் பங்கிற்கு சென்று பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டூ வீலர் உரிமையாளர்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர். பெட்ரோல் டேங்கிற்குள் நிலத்தடி நீர் புகுந்து இருக்கலாம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறினர். ஆத்திரமடைந்த மக்கள் பெட்ரோலுக்கான பணத்தையும் வாகனத்தை சீர் செய்வதற்கான பணத்தையும் தரவேண்டும் என கேட்டனர். பிரச்சனைக்கு தீர்வு கண்டபின் பங்க்கை திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனால் அம்மாபேட்டை பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.