76 விசைப்படகுகள், 23 நாட்டுப்படகுகளில் புறப்பட்ட 3,414 பேர்
76 விசைப்படகுகள், 23 நாட்டுப்படகுகளில் புறப்பட்ட 3,414 பேர் / Ramanathapuram / Kachchatheevu Anthony Chariot Festival இந்திய - இலங்கை மக்களுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடக்கிறது. கச்சத்தீவு செல்ல 76 விசைப்படகுகள் மற்றும் 23 நாட்டுப்படகுகளில் இந்தியாவை சேர்ந்த 3,414 பேர் பங்கேற்றனா். இதற்காக ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் இருந்து பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து ஏராளமானோர் வருகை தந்தனர். கச்சத்தீவு செல்வோரை ராமநாதபுரம் கலெக்ரட் சிம்ரன் ஜித் சிங் காலோன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வருவோர் தீவிர சோதனைக்கு பின் படகுகளில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவ்விழா நாளை நிறைவடைகிறது. பாதுகாப்பு பணியில் இந்திய கடலோர காவல் படை, கடற்படை, கடலோர காவல் குழுமம் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.