பெண் ஊழியர் இருவர் கைவரிசை | Rice Smuggling | Kamuthi
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள நீராவி அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக அங்கு சீர்மரபினர் மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் 30 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இந்த விடுதியில் காப்பாளராக நீராவியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி, வயது 50 மற்றும் சமையலராக பரமக்குடியைச் சேர்ந்த ராசம்மாள், வயது 55 வேலை பார்க்கின்றனர். கடந்த சனிக்கிழமை பகலில் விடுதியில் இருந்து இரண்டு சாக்கு மூடைகளில் அரிசியை பள்ளி மாணவிகளை பயன்படுத்தி மர்ம நபர்கள் ஆட்டோவில் கடத்தி சென்றனர். அரிசி கடத்தல் வாரம் தோறும் ஜோராக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு உடந்தையாக காப்பாளர் பாக்கியலட்சுமி மற்றும் சமையலர் ராசம்மாள் இருப்பது தெரியவந்தது. அரிசி கடத்தலில் ஈடுபட்டு வரும் பெண் ஊழியர் இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் இளைஞர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். விசாரணை நடக்கிறது.