ஆரத்தி எடுத்து வரவேற்பு| Kickboxing Championship Gold Winners Welcome
தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி, புனேவில் உள்ள சத்ரபதி சிவாஜி விளையாட்டு அரங்கத்தில் மே மாதம் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா உட்பட ஏராளமான நாடுகளில் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். பல பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பயிலும் 10 வயது பள்ளி மாணவ மாணவியான லட்சிகா மற்றும் ஸ்ரீசபரி ஆகியோர் தங்கம் பதக்கமும் 13 வயது சங்கீதா வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். பதக்கங்களை வென்று ராணிப்பேட்டைக்கு வந்த வீரர்களுக்கு வாலாஜாபேட்டை யுத்த கலை இன்டர்நேஷனல் சிலம்பம் அகாடமி சார்பில் பயிற்சியாளர் சத்தியமூர்த்தி மற்றும் சிலம்பாட்ட வீரர்கள் மாலைகளை அணிவித்தும் தீப ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.