பக்தர்கள் சிறப்பு வழிபாடு | Swarna Abhishekam to Nandi
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் ஆலயங்களில் மகாசிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கௌதம ஈஸ்வரர் கோயிலில் இன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் வெளியே உள்ள நந்திக்கு பக்தர்கள் சிறப்பு சொர்ண அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவாய நம என்ற பக்தி கோஷத்தை எழுப்பி சுவாமியை வழிபட்டனர்.
மார் 08, 2024