உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / கடுப்பாகி திண்டாடிய பயணிகள் கொந்தளிப்பு| DMK Fails| TNSTC bus| Public transport| Aathur

கடுப்பாகி திண்டாடிய பயணிகள் கொந்தளிப்பு| DMK Fails| TNSTC bus| Public transport| Aathur

நம்பி வந்தா நடுத்தெருல நிக்கணும்! உங்கள நம்பி வந்ததுக்கு நடுத்தெருல நிக்க வச்சுட்டீங்களே எப்ப பாத்தாலும் உங்களுக்கு இதே வேலையா போச்சா இதுக்கு பேரு தான் திராவிட மாடல் விடியல் பஸ்ஸா? திராவிட மாடல் அரசு பஸ்சுக்குனு சில தனிச்சிறப்பு அடையாளம் இருக்கு. பஸ்சுகுள்ள விழுற ஃப்ரீ ஷவர் , கழண்டு விழுற சீட்டு, காத்துல பறக்கிற கூரைனு எக்கச்சக்க வெரைட்டி வச்சிருக்காங்க. இப்போ கூட அரசு பஸ்ல கரப்பான் பூச்சியும் மூட்டைப்பூச்சியும் மக்கள படாத பாடு படுத்திடுச்சு. இந்த லிஸ்ட்ல ஃபர்ஸ்ட் இருக்கிறது பிஸி ரோட்ல ஆடாம அசையாம off ஆகி நிக்கிற பஸ்சு தான். அப்படி ஒரு சம்பவம் தான் சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கம் நடந்திருக்கு. நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கூட்ரோடு பகுதியில ரயில்வே மேம்பால பணி நடக்குது. இதனால வாகனங்கள் ரயில்வே சுரங்கபாத வழியா போகும். நேத்து நாமக்கல் டு கள்ளக்குறிச்சிக்கு அரசு பஸ் கிளம்புச்சு. நரசிங்கபுரம் மேம்பாலம் வழியா போகும்போது பஸ் பிரேக் டவுன் ஆயிடுச்சு. ஏற்கனவே அது குறுகலான இடம். இதனால கொஞ்ச நேரத்துலயே பயங்கர ட்ராபிக் ஜாம் ஆகிடுச்சு. விஷயம் தெரிஞ்சு வந்த ஹைவே டிபார்ட்மென்ட் ஆபிஸர்ஸ், வாகனங்கள வேற பாதையில மாத்தி விட்டாங்க. பஸ்ல இருந்த 30க்கும் மேற்பட்ட பேசஞ்சர்ஸ்ச அப்படியே நடுரோட்ல இறக்கி விட்டுட்டாங்க. மாற்று பஸ் ஏற்பாடு செஞ்சு கொடுக்கணும்னு பேசஞ்சர்ஸ் வாக்குவாதம் செஞ்சதில பரபரப்பு ஆயிடுச்சு. முறையான பராமரிப்பு இல்லாததால திராவிட மாடல் அரசு பஸ் அடிக்கடி மக்கர் பண்ணுதுனு மக்கள் கடுமையா சாடிருக்காங்க. திராவிட மாடல் பஸ்ஸ நம்பி ஏறுனதுக்கு நம்மள நடுத்தெருவுல தவிக்க விட்டுட்டாங்க மக்கானு மக்கள் பொலம்பி தவிச்சிட்டாங்க

நவ 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை