மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் மூலவர் சுவாமி | Murugan Kovil sasti pooja | Attur
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வடசென்னி மலையில் பாலசுப்ரமணியர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மேற்கு திசை நோக்கி மூலவர் பாலசுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார். இதே திசைகளில் மூலவர் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவத்தில் காட்சியளிக்கிறார். இதன் வடக்கு பகுதியில் வாலிப பருவத்தில் தண்டாயுதபாணி சுவாமியாகவும், தென்பகுதியில் திருமண கோலத்தில் பாலசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் முக்காலமும் உணர்த்தும் முருகன் சுவாமியாக உள்ளதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்து வருகின்றனர். சஷ்டியையொட்டி மூலவர் பாலசுப்ரமணியருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து புஷ்ப அலங்காரத்தில் பாலசுப்ரமணியர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.