ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple Festival | Attur | Salem
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் ஸ்ரீபால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இதன் 42ம் ஆண்டு மாலை அணியும் விழா கடந்த டிசம்பர் மாதம் 30 ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று சுவாமி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பொதுமக்கள் சார்பாக இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் மயில் வாகன சிலை கோயிலில் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஜன 06, 2025