உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / வங்கதேச ஊடுருவிகள் உள்ளிருப்புப் போராட்டம் | Illegal migrants protest | Aatur

வங்கதேச ஊடுருவிகள் உள்ளிருப்புப் போராட்டம் | Illegal migrants protest | Aatur

சேலம் ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மாவட்ட சிறை கடந்த ஜூலை 30 முதல் வங்கதேசத்தினர் சிறப்பு முகாமாக மாற்றப்பட்டது. இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்கள் மற்றும் பல வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டனர். ஜாமின் மற்றும் தண்டனை காலம் முடிந்தவர்கள் உட்பட தற்போது மொத்தம் 90 ஆண்கள், 20 பெண்கள், 9 சிறுவர்கள் என 165 வங்கதேசத்தினர் முகாமில் உள்ளனர். இதில் தண்டனை காலம் முடிவடைந்த 50 பேர், தங்களது நாட்டிற்கு திரும்ப அனுமதி வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். சேலம் கலெக்டர் பிருந்தா தேவி, இவர்களை தாய்நாட்டிற்கு அனுப்புவதற்கான ஆவணங்களை மத்திய அரசிற்கு அனுப்பினார். மத்திய அரசு இது தொடர்பாக வங்கதேச அரசுக்கு தகவல் அனுப்பியது. ஆனால் இதுவரை வங்கதேச அரச பதிலளிக்கவில்லை. ஏற்கனவே வங்க தேசத்தில் உள்நாட்டு கலவரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இந்தியாவில் ஊடுருவிய வங்கதேசத்தினரை திரும்ப அழைக்கும் ஏற்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சேலம் முகாமில் இருக்கும் வங்கதேசத்தவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை தாமதமாகி வருகிறது. இதற்கிடையே இன்று தண்டனை முடிந்த 50 உட்பட மொத்தம் 65 பேர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்க நாடு; வங்க நாடு என கோஷம் எழுப்பினர் முகாமுக்குள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் வங்க தேசத்தினர் ஈடுபட்டு வருவதால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பாட்டுக்கு விரைந்த ஆத்தூர் டவுன் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அக் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை