உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / கோவிந்தா கோஷம் முழங்க தேரை இழுத்த பக்தர்கள் | Athur | Sannasi Varathaperumal Temple festival

கோவிந்தா கோஷம் முழங்க தேரை இழுத்த பக்தர்கள் | Athur | Sannasi Varathaperumal Temple festival

சேலம் மாவட்டம் ஆத்துார் தளவாய்பட்டி மலை அடிவாரத்தில் உள்ள பழமை வாய்ந்த சன்னாசி வரதப்பெருமாள் கோயிலில் தை அமாவாசை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சன்னாசி வரதன் மற்றும் வேணுகோபால் சுவாமியின் தேரை பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். சன்னாசி வரதன், வேணுகோபால், ராதா, ருக்குமணி, கிருஷ்ணன், சிங்க முக ஆஞ்சநேயர், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அ.தி.மு.க மாவட்ட செயலர் இளங்கோவன், ஆத்துார் எம்.எல்.ஏ ஜெயசங்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை