சாலையில் உருண்டு விழுந்த பாறைகள், கற்கள் | Yercadu landslide | collector inspection | Attur
தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பாறைகள் கற்கள் சாலை நடுவே கொட்டி கிடக்கிறது. இதனால் இன்று முழுவதும் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் மூன்று பொக்லைன் இயந்திரம் துணையுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண் சரிவு ஏற்பட்ட மலை பாதையில் கலெக்டர் பிருந்தா தேவி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் உத்தரவுப்படி இவ்வழித்தடத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்து தடை செய்யபட்டது. சாலை சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலை ஊழியர்கள் விரைவில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டு கொண்டார். அதைத் தொடர்ந்து நெடுஞ்சாலை மற்றும் மின் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணிகள் ஓரளவு நிறைவு பெற்றது. இதனால் பைக்குகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர வழிவகை செய்யப்பட்டது. மழையால் டூரிஸ்ட்டுகள் வருகையின்றி ஏற்காடு வெறிச்சோடியது.