உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / சிகரெட் ஊதி தள்ளியபடி கை நீட்டி மாட்டிக் கொண்ட அதிகாரி | Bribe | Fire Officer arrested | Sivaganga

சிகரெட் ஊதி தள்ளியபடி கை நீட்டி மாட்டிக் கொண்ட அதிகாரி | Bribe | Fire Officer arrested | Sivaganga

சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தை சேர்ந்தவர் கற்பக மூர்த்தி. கோழி பண்ணை அமைக்க தீயணைப்பு துறையிடம் தடையில்லா சான்று கேட்டுள்ளார். சிவகங்கை தீயணைப்பு துறை மாவட்ட துணை அலுவலர் நாகராஜன் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முன் பணமாக ஆயிரம் ரூபாய் வாங்கிய அவர் மீதியை பிறகு தர சொன்னார். இதனால் அதிர்ச்சி அடைந்த கற்பக மூர்த்தி லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் கொடுத்தார். ஏற்கனவே ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்ததை வீடியோ எடுத்தும் வைத்திருந்தார். மீதி பணத்தை கற்பக மூர்த்தி கொடுக்க செல்லும் போது லஞ்சம் ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்தனர். அதிகாரி நாகராஜன் லஞ்சம் வாங்கும் போது அவரை கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர். கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ