உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / 50 பேர் காயம் | Sivagangai | Kandupatti Manjuvirattu

50 பேர் காயம் | Sivagangai | Kandupatti Manjuvirattu

சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டி புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழா மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. விழாவையொட்டி ஆலயம் முன்பு பொங்கலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி, கரும்புத்தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். போட்டியை கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். வாடிவாசல் வழியே மஞ்சுவிரட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன. 57 காளைகள் மற்றும் 17 வீரர்கள் பங்கேற்றனர். மஞ்சுவிரட்டு துவங்கும் முன்பே திறந்த வெளியில் அனுமதியின்றி 300 க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. கட்டுமாடுகள் முட்டியதில் 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் 10 பேர் சிவகங்கை அரசு ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர். கோவினிபட்டியை சேர்ந்த பூமிநாதன் வயது 56 தனது மாட்டை கட்டுமாடாக அவிழ்த்து விடும் போது எதிர்பாராத விதமாக மாடு கழுத்தில் குத்தியதில் படுகாயம் அடைந்தார். அவரை சிவகங்கை அரசு ஆஸ்பிடலில் சேர்த்தனர். அங்கு இறந்தார். விசாரணை நடக்கிறது.

ஜன 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை