திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple Festival | Sivagangai
சிவகங்கை பஸ் நிலையம் எதிரில் பிள்ளை வயல் காளியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு நடைபெறும் பூச்செரிதல் விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. பூச்செரிதல் விழாவை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஜூலை 05, 2024