உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / படுகாயத்துடன் 40 பயணிகள் தென்காசி அரசு ஹாஸ்பிடலில் அனுமதி

படுகாயத்துடன் 40 பயணிகள் தென்காசி அரசு ஹாஸ்பிடலில் அனுமதி

படுகாயத்துடன் 40 பயணிகள் தென்காசி அரசு ஹாஸ்பிடலில் அனுமதி | 2 buses collide in accident | 8 passengers died | 40 worried | Tenkasi தென்காசி மாவட்டம் இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் இருந்து இன்று காலை 11 மணியளவில் கேஎஸ்ஆர் என்ற தனியார் பஸ் தென்காசி வழியாக ராஜபாளையம் நோக்கி சென்றது. அதே போல் கோவில்பட்டி டு தென்காசி நோக்கி எம்ஆர் கோபாலன் என்ற தனியார் வந்து கொண்டிருந்தது. இடைகால் துரைச்சாமிபுரம் அருகே வந்த போது இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு பஸ்களின் முன் பகுதி நொறுங்கி உருக்குலைந்து போனது. இந்தக் கோர விபத்தில் 8 பயணிகள் ரத்த வெள்ளத்தில் ஸ்பாட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மரண ஓலமிட்டனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஸ்பாட்டுக்கு விரைந்தனர். இடுபாடுகளில் சிக்கிய படுகாயமடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு ஹாஸ்பிடல் அட்மிட் செய்தனர். அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஹாஸ்பிடல் வட்டார தகவல் தெரிவிக்கிறது. விபத்து நடந்த இடத்தை தென்காசி கலெக்டர் கமல் கிஷோர், எஸ்பி எஸ்பி அரவிந்த் பார்வையிட்டனர். ஹாஸ்பிடல் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். ஹாஸ்பிடல் வளாகத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் குவிந்து வண்ணம் உள்ளனர். உறவினர்களின் கண்ணீர் நெஞ்சை உலுக்கியது. தென்காசி போலீசார் விசாரிக்கின்றனர்.

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை