உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / திமுகவை சேர்ந்த ஊராட்சி பெண் கவுன்சிலர்கள் வாக்குவாதம்

திமுகவை சேர்ந்த ஊராட்சி பெண் கவுன்சிலர்கள் வாக்குவாதம்

திமுகவை சேர்ந்த ஊராட்சி பெண் கவுன்சிலர்கள் வாக்குவாதம் / Tenkasi / DMK-affiliated panchayat women councilors argue தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கூட்டத்தில் 14 கவுன்சிலர்களில் 13 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் குறித்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதியில் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், ஒரு சில வார்டு பகுதிகளில் அதிக நிதி ஒதுக்கி ஊழலில் ஈடுபடுவதாகவும் திமுக கவுன்சிலர்கள் கனிமொழி, மதிமாரி முத்து குற்றம் சாட்டினர். திமுக கவுன்சிலர் பூங்கொடி பேசுகையில், கட்சியில் இருந்து கொண்டு திமுக ஆட்சியில் ஊழல் நடைபெறுவதாக குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஒரு கவுன்சிலர் தவிர மற்ற கவுன்சிலர்கள் கையெழுத்திட்டதால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திமுக உறுப்பினர்களிடையே ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து அதே கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மார் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை